தொடக்கத்தில் தடுமாறினாலும் 294 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா!

லண்டன்: முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 295 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 140 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டாலும்கூட, பின்னர் சுதாரித்து ஆடியது.

அந்த அணியின் மிட்செல் மார்ஷ் 73 ரன்களும், கிளென் மாக்ஸ்வெல் 77 ரன்களும் அடித்து கைகொடுத்தனர். இதில், மாக்ஸ்வெல் 59 பந்துகளே எடுத்துக்கொண்டார். அவர் 4 சிக்ஸர்களை விளாசினார்.

இறுதியில், அந்த அணி, 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களைக் குவித்தது. மிட்செல் ஸ்டார்க் 1 சிக்ஸர் & 1 பவுண்டரி என 19 ரன்களை கடைசிநேரத்தில் அடித்தார்.

இங்கிலாந்து சார்பில், ஆர்ச்சர் மற்றும் மார்க்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.