இந்திய அணியைப் போன்று பெரிய இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, கடைசி கட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிவிட்டது.

அந்த அணி முழுமையாக 50 ஓவரை விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் டேவிட் வார்னர் 107 ரன்கள் அடித்தார். கேப்டன் ஆரோன் ஃபின்ச் 82 ரன்கள் அடித்தார்.

இந்த 2 வீரர்கள் தவிர, வேறு எந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மெனும் குறிப்பிட்டு சொல்லும்படியான ரன்களை அடிக்கவில்லை. குறிப்பாக ஒருவர்கூட 30 ரன்களை எட்டவில்லை.
4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களையே அடித்தனர்.

பாகிஸ்தானின் முகமது ஆமிர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷகீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்தினார்.

பாகிஸ்தான் 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு முயன்றால் எளிதில் எட்டக்கூடிய இலக்குதான். பார்ப்போம்…பாகிஸ்தானின் அதிரடி எப்படி இருக்கிறது என்று..!