சிட்னி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், பேட்டிங் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

இன்றைய இங்கிலாந்து பேட்டிங்கின் சிறப்பு என்னவெனில், அந்த அணியின் முதல் 5 பேட்ஸ்மென்கள் அனைவருமே மிகப்பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவர்களில், ஸ்மித் சதமடிக்க, மற்ற நால்வரும் அரைசதம் அடித்தனர். டேவிட் வார்னர் 83 ரன்கள், கேப்டன் ஆரோன் பின்ச் 60 ரன்கள், மார்னஸ் 70 ரன்கள் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் 63 ரன்கள் அடித்தனர். ஆறாவது விக்கெட்டாக நின்ற ஹென்ரிக்யுஸ் 2 ரன்களுடன் களத்தில் நின்றார்.

தங்களுக்கான வாய்ப்பை ஒருவர்கூட வீணாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித், 64 பந்துகளில் 2 சிக்ஸர் & 14 பவுண்டரிகளுடன் 104 ரன்களை எடுத்து அவுட்டானார். மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்கள& 4 பவுண்டரிகள் வெளுத்தார்.

இந்தியப் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. மொத்தம் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் 3 விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தது. ஜடேஜா மட்டுமே 10 ஓவர்கள் வீசி 60 ரன்கள் கொடுத்தார்.

நவ்தீப் சைனி 7 ஓவர்களுக்கு 70 ரன்களையும், சாஹல் 9 ஓவர்களுக்கு 71 ரன்கள‍ையும் வாரி வழங்கினர். மிகப்பெரிய இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்யுமா?