பெண்கள் டி20 உலகக்கோப்ப‍ை இறுதி – முதலில் களமிறங்கி அதிரடி காட்டும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி துவங்கியுள்ள நிலையில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, அதிரடியாக ஆடி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி, துவக்க வீராங்கனைகளாக அலிஸா ஹீலியும், பெத் மூனியும் களமிறங்கினர்.

தற்போதைய நிலையில், 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. ஹீலி 29 பந்துகளில் 49 ரன்களை விளாசியுள்ளார். மூனி 29 ரன்களை அடித்துள்ளார்.

இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட் மற்றும் பூனம் யாதவ் ஆகியோர் பந்துவீசி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி பிரமாண்ட ஸ்கோரை எட்டினால், அது பின்னால் சேஸிங் செய்யும் இந்திய அணிக்கு சிக்கலைத்தான் ஏற்படுத்தும்.