‘நியூ கொழும்பு’ திட்டம் மூலம் இந்திய கலாச்சாரத்தை கற்க வரும் ஆஸ்திரேலியா மாணவர்கள்!

கான்பெரா:

‘நியூ கொழும்பு’ திட்டம் மூலம் இந்திய கலாச்சாரத்தை கற்க ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 1261 பட்டதாரி மாணவர்கள் 2019ம் ஆண்டு இந்திய வர இருப்பதாக ஆஸ்திரேயா அரசு தெரிவித்து உள்ளது.

ஆஸ்திரேலியா தனது நட்பு நாடுகளுடன் உறவை மேம்படுத்தும் வகையிலும், அந்த நாடுகளின் கல்வி, கலாச்சாரம், அரசியல் போன்றவற்றை தங்களது நாட்டு மாணவர்கள்  தெரிந்து கொள்ளும் வகையில் ‘புதிய கொழும்பு’ என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது.

இந்த திட்டத்தின்படி, ஆஸ்திரேலியாக நாட்டு பட்டதாரி மாணவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா நாட்டு இந்திய ஆணையர் ஹரிந்தர் சித்து,  இந்தியாவில் உள்ள கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், பொருளாதார நிலை, முக்கிய உணவுகள் போன்றவற்றை கற்றுக்கொள்ளும் வகையில், ஆஸ்திரேலியாவின் தலைச்சிறந்த பல்கலைக் கழகத்திலிருந்து சிறந்த பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு  2019ம் ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பு கிறோம். இதன்மூலம் இருநாட்டு கலாச்சாரங்களை பகிர்ந்து கொள்ள முடியும். அதுபோல ஆஸ்திரேலிய மாணவர்கள், இந்தியா மக்களின் பாரம்பரியத்தை புரிந்து கொள்வதோடு, வாழ்க்கை யில் மேம்பட்டு இந்தியா கலாச்சாரத்தை ஆஸ்திரேலியாவிலும் தொடர்வார்கள்.

இநத புதிய கொழும்பு திட்டத்தின்படி அடுத்த ஆண்டு (2019)  மட்டும் 1261 மாணவர்கள் இந்தியா வரவிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சமீபத்தில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியா  சென்றிருந்தபோது, இந்த விவகாரம் உள்பட 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.