ஐசிசி தர வரிசை பட்டியல்….34 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணி சரிவு

துபாய்:

ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவனாக விளங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது தர வரிசை பட்டியலில் சரிவை சந்தித்து வருகிறது. உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியால் தற்போது பல போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லையே என்று ரசிகர்கள் ஆதங்கப்படும் அளவுக்கு அதன் நிலை தள்ளப்பட்டுள்ளது.

பந்து சேப்படுத்திய விவகாரத்திற்குப் பின்னர் வார்னர், ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி தத்தளித்து வருகிறது. தற்போது இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் மூலம் இன்று வெளியிடப்படட ஐசிசி.யின் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 34 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன் 1984ம் ஆண்டில்ல் 6-வது இடத்தில் இருந்தது.

இங்கிலாந்து 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-ம் இடத்திலும், 113 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 3ம் இடத்திலும், 112 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4-ம் இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும், ஆஸ்திரேலியா 102 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இந்த நிலையை கண்டு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.