முதல் டி20 – 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்ற ஆஸ்திரேலியா!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 107 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது.

ஆரோன் பின்ச் 42 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 45 ரன்களும் அடித்தனர்.

பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், டு பிளசிஸ் அடித்த 24 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். பவுலர் ரபாடா அடித்த 22 ரன்கள்தான் இரண்டாவது கூடுதல் ரன்கள். மொத்தத்தில், 14.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் ஆஸ்திரேலியா 107 ரன்கள் வித்தியாசம் என்ற பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அந்த அணியின் ஆஷ்டன் ஆகர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.