இரண்டாவது போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

--

மெல்போர்ன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 247 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 467 ரன்களை விரட்டிய நியூசிலாந்து 148 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆன்து. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களோடு டிக்ளேர் செய்து, 488 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அசாதாரண இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டெல் மட்டுமே அசராது போராடி சதமடித்தார். அவர் 121 ரன்களை சேர்த்தார். அவருக்கு அடுத்து ஹென்றி நிக்கோல்ஸ் அடித்த 33 ரன்கள்தான் அதிகபட்ச ரன்களாகும்.

வேறு பேட்ஸ்மென்கள் யாரும் நியூலாந்திற்காக சோபிக்கவில்லை. இறுதியில், 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரண்டர் ஆனது நியூசிலாந்து அணி.

ஆஸ்திரேலியா சார்பில் லயன் 4 விக்கெட்டுகளையும், பேட்டிசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 2 போட்டிகளை வென்றதன் மூலமாக தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா.