மூன்றாவது டி-20 போட்டியை 5 விக்கெட்டுகளில் வென்ற ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ 55 ரன்கள் அடித்தார். மொயின் அலி 23 ரன்களும், டென்லி 29 ரன்களும், டாவிட் மாலன் 21 ரன்களும் அடித்தனர்.

முடிவில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே அடித்தது இங்கிலாந்து.

அதன்பிறகு சற்று எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு, கேப்டன் ஃபின்ச் 39 ரன்களும், மிட்செல் மார்ஷ் 39 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 ரன்களும் அடித்து கைகொடுக்க, 19.3 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து, அந்த அணி இலக்கை எட்டியது.

இங்கிலாந்து அணியில் மொத்தம் 7 பேர் பந்துவீச, அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.