15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆஸ்திரேலியா

லண்டன்:

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நாட்டிகாமில் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.


டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங் செய்து 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது.

பின்னர் 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 273 ரன்கள் மட்டும் எடுத்தது.

அதிகபட்சமாக சாய் ஹோப் 68 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 51 ரன்களும் எடுத்தனர்.

க்ரிஸ் கெய்ல்  எல்பிடபிள்யூ அவுட் ஆனதாக அம்பையர் அறிவித்தார்.

ஆனால், ப்ரிவியூவ் பார்த்தபோது, பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிச் ஆனது. எனினும் கெயில் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும், ஆடம் சாம்பா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

ஆட்ட நாயகனாக நாதன் கொல்டர் நைல் தேர்வு செய்யப்பட்டார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Australia, கொல்டர் நைல்
-=-