அடிலெய்டு:

இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து பந்துவீச்சார்களை தொடர்ந்து வம்பிழுத்துக்கொண்டே இருந்தது விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கியது.

தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரண்டாவது போட்டி, அடிலெய்டில் பகலிரவு போட்டியாக இன்று துவங்கியது.

இதில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முதலில் ‘பீல்டிங்’கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், நான்கு விக்கெட்டுக்கு, 209 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியின் நடுவே, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து பந்துவீச்சார்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோருடன் சச்சரவில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். போட்டி ஆரம்பிக்கும் முன்பே, ஆண்டர்சனை சண்டைக்காரர் என , ஸ்மித் விமர்சித்து சூடான சூழலை ஏற்படுத்தியிருந்தார்.

போட்டியின் 56.3வது ஓவரின் நடுவே, ஸ்மித் ஆண்டர்சனை ஆக்ரோஷமாக சண்டைக்கு இழுத்தார் ஸ்மித். உடனே அம்பயர் அலிம்தார், குறுக்கிட்டு சமாதானம் செய்தார், ஆனாலும் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அலிம்தார் அவர்கள் இருவருக்கும் இடையே குறுக்கே நின்று கொண்டார்.

அதன் பிறகு இவர்களின் வாக்கு வாதம் நின்றது. இன்றைய ஆட்டத்தில் ஸ்மித் வேண்டுமென்ற இங்கிலாந்து பந்துவீச்சாளர்களிடம் வம்பிழுத்தது விளையாட்டு ரசிகர்களை எரிச்சல்படுத்தியது.