”வீட்டிக்கு வந்து என் குழந்தையை பார்த்துக்கோ…” – மைதானத்தில் ரிஷப் பண்டை கிண்டலடித்த ஆஸ்திரேலிய கேப்டன்!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தொடர்ந்து இந்திய வீரர்களை மைதானத்தில் வம்பு இழுத்த வண்ணம் உள்ளார். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது அவரை வம்பு இழுத்து பேசியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது.

tim

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அசத்தலான வெற்ரியை பதிவு செய்து வருகிறது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 443 ரன்கள் எடுத்து அசத்தியது. அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தது.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் 106 ரன்களை எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை சேஸ் செய்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் இந்திய வீரர்களை தொடர்ந்து கிண்டலடித்து வருவதுடன், வாய்த்தகராறிலும் ஈடுபட்டு வருகிறார். ரோஹித் சர்மாவை கிண்டலடித்த டிம்ப் பெய்ன், “ ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல் ஆகியவற்றில் எந்த அணியை ஆதரிப்பது என குழப்பமாக இருக்கிறது. நீ (ரோகித் சர்மா) சிக்ஸர் அடிச்சா நான் மும்பை அணியை ஆதரிக்கிறேன் ” என பேசினார்,

அதே போல் ரிஷ்ப் பண்ட் பேட்டிங் செய்த போது டிம் பெய்ன் மீண்டும் வம்புக்கு இழுத்தது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது. மைதானத்தில் போட்டியின் போது டிம், “ தோனியால் நீ ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து நீக்கிட்டாங்க. பரவாயில்லை உன்ன வேணும்னா பிக்பாஸ் போட்டியில் சேர்த்து விடவார்? போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ, நானும் என் மனைவியும் படத்துக்கு போயிட்டு வருகிறோம் ” என அடுத்தடுத்து கலாய்த்துக் கொண்டிருந்தார்.

டிம் இவ்வாறு போட்டியின் போது அநாகரிகமாக பேசியது அனைத்தும் ஸ்டெம்ப் மைகில் பதிவாகியதுடன், நேரடியாக ஒளிபரப்பானது. இதனால் டிம்பிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.