ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியை அறிவித்த ஆஸ்திரேலியா

சிட்னி

நாளை சிட்னியில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறாது. தனது சுற்றுப் பயணத்தில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது. இந்தியா இரு போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வென்றன. கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த பயணத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையே மூன்று ஒரு நாள் பந்தயங்கள் நடைபெற உள்ளன.
முதல் ஒருநாள் (சிட்னி): ஜனவரி 12 – காலை 7.50 முதல் நடக்கிறது.
2-வது ஒருநாள் (அடிலெய்ட்): ஜனவரி 15 – காலை 8.50 முதல் நடக்கிறது
3-வது ஒருநாள் (மெல்போர்ன்): ஜனவரி 18 – காலை 7.50 முதல் நடக்கிறது.

நாளை சிட்னியில் நடைபெற உள்ள ஒரு நாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள்து. அந்த அணியில் ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், பீட்டர் சிடில், மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பெற்றுள்ளனர்.

சுமார் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பீட்டர் சிடில் ஆஸ்திரேலியாவுக்காக ஆட உள்ளது குறிப்பிடத்தகக்தாகும்.