வரலாறு காணாத வெள்ளம்: ஆஸ்திரேலியாவில் 5லட்சம் கால்நடைகள் பலி

குயின்ஸ்லாந்து:

ஸ்திரேலியாவில் இந்த ஆண்டு பெய்த பேய்மழை காரணமாக ஏற்றப்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 5 லட்சத்திற்கம் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வறட்சி நிலவி வந்த ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையான மழை பெய்தது. குறிப்பாக குயின்ஸ்லாந்து பகுதியில் பெய்த பெருமழை காரணமாக  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அங்கு 100 ஆண்டுகள் இல்லாத அளவில் பேய்மழை கொட்டி தீர்த்ததால் குயின்ஸ்லாந்து முழுவதும் நீரில் மிதந்தது. அந்த பகுதியில் மின்சாரம், போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப் பட்ட நிலையில் மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தும, சுமார் . சுமார் 20 ஆயிரம் வீடுகளும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த வெள்ளம் காரணமாக அணைகள் நிரம்பி வழிந்ததால், அவைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கில், ஏராளமான வன உயிரினங்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வன உயிரினங்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தங்களது உயிர்களை விட்டுள்ளது. அதுபோல ஏராளமானமுதலைகளும் ஊருக்குள் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.

மழை வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகள் ஆங்காங்கே இறந்து கிடக்கும் காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது. இந்த வெள்ளம் காரணமாக சுமார்  5 லட்சம் உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

கால்நடைகள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடக்கும் காட்சிகள் இயற்கையின் கோர தாண்டவத்தை தோலுரித்து காட்டுகிறது.