ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றில் வெற்றிப்பெற்ற பெட்ரோ கிவிட்டோவா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

petra

கிராண்ட்ஸ்லாம் போட்டி என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் மற்றும் காலிறுதி போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை அரையிறுதி சுற்று நடைபெற்றது.

இதில் செக்குடியரசு நாட்டை சேர்ந்த வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா அமெரிக்க வீராங்கனை டேனிலி ரோஸை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய கிவிட்டோவா 7-6, (7-2), 6-0 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து கிவிட்டோவா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதி போட்டியில் கிவிட்டோவா தனது நாட்டை சேர்ந்த பிளிஸ்கோவா அல்லது ஜப்பான் நாட்டை சேர்ந்த் ஒசாகா உடன் மோத உள்ளார். டென்னிஸ் போட்டியின் 2முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற கிவிட்டோவா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் இறுதி போட்டிக்கு முன்னேறியது இதுவே முதல் முறை.

இதேபோன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்றில் ரபேல் நடால் மற்றும் சிட்சிபஸ் மோதுகின்றனர். இவர்களில் வெற்றிப்பெறுவோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர்.