மெர்ல்போன்:

கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கு சொந்தக்காரராக விளங்கும் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் மனிதாபிமான செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது

ரோஜர் பெடரர் சிறந்த டென்னீஸ் வீரர் என்பது உலகறிந்த விஷயம். ஆனால், அவர் ஒரு குரு விசுவாசி என்பதற்கு சிறந்த உதாரணமாக அவர் திகழ்கிறார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவரது முதல் சர்வதேச பயிற்சியாளராக இருந்தவர் பீட்டர் கார்ட்டர். பெடரர் 9 வயது சிறுவனாக இருந்தபோது அவருக்கு பீட்டர் கார்ட்டர் பயிற்சி அளிக்க தொடங்கினார். 2002ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி அவரது மனைவியுடன் சென்றபோது பரிதாபமாக இறந்தார்.

அப்போது அவருக்கு 37 வயது தான் ஆகியிருந்தது. இந்த துயர சம்பவத்தால் பெடரர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். அப்போது பெடரருக்கு 21 வயது இருக்கும்.

பெடரரின் நேர்மைக்கு மதிப்பளித்த பீட்டர் கார்ட்டரின் இழப்பை ஜீரணிக்க முடியாமல் அன்று அவர் விளையாடிய டொரோன்டோ தெருவில் அங்கும் இங்கும் ஓடினார். அன்று முதல் தனது வாழ்நாளில் எல்லா கால கட்டத்திலும் பீட்டர் கார்ட்டரை பெருமைபடுத்த பெடரர் முடிவு செய்தார்.

அதன் அடிப்படையில் பீட்டர் கார்ட்டரின் பெற்றோரான போப் மற்றும் டயானா கார்ட்டர் ஆகியோரை இன்று வரை கவுரவப்படுத்தி வருகிறார். 2005ம் ஆண்டு முதல் அதிலயிடை சேர்ந்த அந்த தம்பதியை போட்டி நடக்கும் மைதானத்துக்கு பெடரர் அணியினர் செலவில் அழைத்து வரப்படுகிறார்கள். முதல் கிளாஸ் விமான டிக்கெட், பெடரர் தங்கும் ஓட்டலிலேயே அறை, உணவு, வெற்றி கொண்டாட்டம், மெர்ல்போனில் நடக்கும் கொண்டாட்டங்களிலும் இந்த தம்பதியர் கலந்து கொள்ள சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

போட்டிகளை பெடரரின் பிரத்யேக பாக்ஸில் அமர்ந்து பார்வையிடுவார்கள். அவர்கள் பெடரரை தங்களது மகனை போல் நினைக்கிறார்கள். தங்களது மகன் பீட்டர் காட்டராக அவர்கள் பெடரரை கருதுகிறார்கள். தனது வாழ்வில் பீட்டர் காட்டரின் குடும்பத்தினர் அளித்த பங்களிப்பை பெடரர் மறக்கவில்லை. அவரது வாழ்க்கையில் உதவியவர்களை மறக்காத அவரது எண்ணம் தான் பெடரரை டென்னிஸில் உயர்ந்த நிலையை அடைய செய்துள்ளது என பலரும் புகழ்கின்றனர்.