ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: குரோசிய வீரர் மரின் சிலிக் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்,

ஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் குரேசிய வீரர் மரின் சலிக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று  நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், குரோசியாவின் மரின் சிலிக்கும், பிரிட்டனின் கைல் எட்மண்ட் இடையே போட்டி நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே மரின் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். அவரது வேகத்துக்கு பிரிட்டன் வீரரால் ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதன் காரணமாக முதல் செட்டை 6-2 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றிய மரின், இரண்டாவது சுற்றையும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற உள்ள மற்றொரு  அரையிறுதி போட்டியில்  சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தென்கொரியாவின் சுங் ஹியோனை எதிர்கொள்கிறார்.

இதில் வெற்றி பெறுபவருடன் மரின் சிலிக் இறுதிபோட்டியில் மோதுவார்.