ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஷரபோவா

மெல்போர்ன்,

ஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 2018ம் ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம்  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியல் மரியா ஷரபோவா அனஸ்தேசிய சேவாஸ்டாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம்  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 15ந்தேதி தொடங்கிய இந்த போட்டி வரும்  28 ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் 5 வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் மரியா ஷரபோவா 14 வது வரிசையில் உள்ள அனஸ்தேசியா செவாஸ்டவாவை எதிர்கொண்டார்.  இதில் அவரை வீழ்த்தி ஷரபோவா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த சுற்றில் ஷரபோவா ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர்-ஐ எதிர்கொள்ள உள்ளார்.