பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறதா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்?

மெல்போர்ன்: ஜனவரி மாத மத்தியில் துவங்க வேண்டிய கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பிப்ரவரி 8ம் தேதி துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, ஜனவரி மூன்றாவது வாரத்தில் மெல்போர்னில் துவங்கும் இத்தொடர், விக்டோரியா மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டதன் காரணமாக, தாமதமானது.

இத்தொடரில் பங்கேற்க, அடுத்தாண்டு ஜனவரி 15ம் தேதி முதல் ஆஸ்திரேலியா வரவிருக்கும் சர்வதேச நட்சத்திரங்கள், தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனையில் அவர்கள் நெகடிவ் ரிசல்ட் வரும்பட்சத்தில், அவர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, பிப்ரவரி 8ம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.