சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், அடுத்தாண்டு பிப்ரவரி 8ம் தேதி துவங்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கமான காலத்தைவிட, இது 3 வாரங்கள் தாமதம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் காரணமாக, இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இத்தொடர், 2021ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்தப் போட்டி, எப்போதும் ஜனவரி 18ம் தேதி துவங்கக்கூடியது. ஆனால், கொரோனா காரணமாக, போட்டி அமைப்பாளர்கள், உள்ளூர் நிர்வாகத்திடம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இறுதியாக, பிப்ரவரி 8ம் தேதி முடிவாகியுள்ளது.

“பல அம்சங்களின் அடிப்படையில், இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க ‘ஆஸ்திரேலிய ஓபன்’ போட்டியாக இருக்கும். கடந்த 100 ஆண்டுகளில், தற்போதுதான் இந்தப் போட்டி பிப்ரவரி மாதம் துவங்குகிறது” என்று கூறியுள்ளார் போட்டி இயக்குநர் கிரெய்க் டிலே.