Random image

தலித் வன்கொடுமை எதிர்ப்பு சட்டம் : இங்கிலாந்தை பின் தொடரும் ஆஸ்திரேலியா

கான்பெரா

ங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

ஐநா சபை சமீபத்தில் வேலை மற்றும் வகுப்புப் பிரிவினையை எதிர்த்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.   அதை ஒட்டி இங்கிலாந்து பாராளுமன்றம் தாழ்த்தப்பட்டோர் அவர்களின் சாதி மற்றும் பணியினால் கேவலப்படுத்துவதை எதிர்த்து சட்டம் ஒன்றை இயற்றியது.   இவ்வாறு பிறப்பினால் ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என சொல்வது மனித உரிமைக்கு எதிரானது என இங்கிலாந்து நாடு அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பாலினம் மற்றும் இனப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டம் உள்ளது.    கடந்த ஜுன் மாதம் 27 ஆம் தேதி ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.   அதில் பிறப்பைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கொடுமை செய்வதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், “உலகெங்கும் உள்ள பல நாடுகளில் சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட்டு வருகின்றன.   இதில் இந்தியாவும் நேபாளமும் அடங்கும்.   அந்த நாடுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறை மற்றும் அவமானப்படுத்துதல் ஆகியவைகளை தடுக்க ஏற்கனவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.” என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஏக மனதாக ஒப்புக் கொண்டபடியால் சட்டமாக இயற்றப்பட உள்ளது.   இதன் மூலம்  அனைத்து தாழ்த்தப்பட்டவர்களும் சமமாக கருதப்படுவார்கள் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.    அத்துடன் இந்த சட்டத்துக்கு உலகெங்கும் உள்ள தாழ்த்தப்பட்டோரின் ஆதரவையும் அரசு கோரி உள்ளது.

உலகெங்கும் உள்ள மக்களில் தெற்கு ஆசியாவில் சுமார் 21 கோடி பேர் தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.     அவர்களுக்கு இந்த சட்டம் ஆறுதலை அளிக்கும் எனவும் அவர்கள் தங்கள் உரிமைக்கு போராட  இந்த சட்டம் துணையாக இருக்கும் என கூறப்படுகிறது.