பிக்பாஷ் டி-20 தொடர் – 79 பந்துகளில் 147 ரன்களை நொறுக்கிய ஸ்டாய்னிஸ்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ‘பிக் பாஷ்’ டி-20 தொடரில் 79 பந்துகளில் 147 ரன்களை விளாசியுள்ளார் ஸ்டாய்னிஸ்.

இவர் 2020ம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியால் ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் லீக் போட்டி ஒன்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின. இதில் மெல்போர்ன் அணி சார்பாக விளையாடி ஸ்டாய்னிஸ் 79 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகள் துணையுடன் 147 ரன்களை விளாசினார்.

இதன்மூலம், மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 219 ரன்களை குவித்தது. இப்போட்டியில் சிட்னி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த 147 ரன்கள், ஒட்டுமொத்த டி-20 அரங்கில் எடுக்கப்பட்ட 13வது சிறந்த ரன்னாகும். பெங்களூரு அணிக்காக ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெயில் அடித்து நொறுக்கிய 175 ரன்கள்தான் இதுவரையிலான சாதனையாக இருந்து வருகிறது.

You may have missed