Random image

ஸ்டிராபெரி பழத்துக்குள் ஊசி : ஆஸ்திரேலியர்கள் அச்சம்

குவின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா

ஸ்திரேலியாவில் ஸ்டிராபெரி பழத்துக்குள் தைக்கும் ஊசி காணப்பட்டதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ் பெற்ற பழங்களில் ஸ்டிராபெரியும் ஒன்றாகும்.   உலகிலேயே அதிக அளவில் ஆஸ்திரேலியாவில் இந்த பழம் பயிரிடப்படுகிறது.   நம் நாட்டில் மாம்பழம், வாழை, பலா என புகழ் பெற்ற முக்கனிகளைப் போல் ஆஸ்திரேலியாவில் ஸ்டிராபெரி,  ஆப்பிள் போன்ற பழங்கள் புகழ் பெற்றவை ஆகும்.

கடந்த 9 ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவின் நகரில் ஸ்டிராபெரி பழம் வாங்கிய ஒருவர் அதனுள் ஒரு தையல் ஊசி இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளார்.  அதைத் தொடர்ந்து மேலும் பல இடங்களில் பழத்துக்குள் ஊசி இருந்தது தெரிய வந்தது.   செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி மற்றொரு நகரமான சிட்னியில் இதே போல பல பழங்களில் ஊசி இருந்தது தெரிய வந்துள்ளது.

தற்போது 100 க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்டிராபரி போன்றே ஆப்பிள், வாழை உள்ளிட்ட பழங்களுக்குள்ளும் ஊசி இருந்தது தெரிய வந்துள்ளது.    இதனால் யாரும் காயம் அடையவில்லை எனவும் சுமார் 100 பேர்கள் வரை நாக்கில் ஊசி குத்தி காயம் அடைந்ததாகவும் இரு விதமான செய்திகள் வருகின்றன.   உணவுத் துறை ஸ்டிராபெரி பழத்தை அப்படியே கடித்து உண்ண வேண்டாம் எனவும் நறுக்கி சோதித்த பின்பு உண்ணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த தகவல்கள் தவறானவை என ஆஸ்திரேலிய நாட்டின் உணவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மருத்துள்ளார்.   ஒரு சிலர் விளையாட்டுக்காக இத்தகைய புகைப்படங்களை பதிவதால் நாட்டு மக்கள் தேவையற்று அச்சமுறுவதாக கூறி உள்ளார்.  மேலும் இவ்வாறு பொய்யான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த தகவல்களினால் ஸ்டிராபெரி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதனால் விற்பனை கடுமையாக குறைந்துள்ளதால் தற்போது அவர்கள் சுமார் 844 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்டிராபெரி பழங்களை குப்பையில் கொட்டும் நிலைக்கு வந்துள்ளனர்.   இதனால் அவர்கள் அரசின் நிதி உதவியை கோரி உள்ளனர்.