ஆர்ச்சருக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் எடுக்க முடிந்த ரன்கள் 179

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியாவின் கதை வெறும் 179 ரன்களுக்கு முடித்துவைக்கப்பட்டது.

உபயம் இங்கிலாந்தின் ஆர்ச்சர்..!

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்யுமாறு கூற, பெரிய இலக்கை அடைந்திட வேண்டும் என்ற வேகத்தோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் வார்னர் 61 ரன்களும், நான்காவது வீரர் மேமஸ்லபுஷ்னே 74 ரன்களும் அடித்து, அரை சதங்களை பதிவிட்டனர்.

காயம் காரணமாக இப்போட்டியில் ஸ்மித் இடம்பெறவில்லை. மற்ற வீரர்களில் டிம் பெய்னே மட்டுமே 11 என்ற இரட்டை இலக்க ரன்களை அடித்தார். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மற்றும் டக் அவுட். எனவே, வெறும் 179 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய கணக்கில் சேர்ந்தன.

இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆர்ச்சர், ஆஸி. பேட்ஸ்மென்களை ஒரு கை பார்த்துவிட்டார். அவர் அள்ளியது மொத்தம் 6 விக்கெட்டுகளை! ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகள், வோக்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.