சிட்னி

முதலாம் உலகப் போர் நிகழ்ந்த போது காணமல் போன ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் HMAS AE1 என்பதாகும் .   சென்ற நூற்றாண்டில் 1914 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று இந்தக் கப்பல் 35 போர் வீரர்களுடன் பிரிட்டனுக்கு அயர்லாந்துக்கும் இடையில் சென்றுக் கொண்டிருந்த போது காணாமல் போய் விட்டது.   அதற்கான காரணம் இன்று வரை அறியப்படவில்லை.

தற்போது ஃபக்ரோ ஈக்வடார் என்னும் மீட்புக் கப்பல் வேறொரு ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இந்த ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பலை கண்டு பிடித்துள்ளது.   ட்யூக் ஆஃப் யார்க் தீவுகள் பகுதியில் சுமார் 300 மீட்டர் ஆழத்தில் இந்தக் கப்பல் கடலுக்குள் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர், “இந்த நீர்மூழ்கிக் கப்பலை நாங்கள் 1914ல் இழந்தது எங்கள் நாட்டின் மிகப் பெரிய துயர நிகழ்வாகும்.    எங்கள் கடற்படையின் முதல் நஷ்டம் இது தான்.    முதல் உலகப்போரில் எங்களது முதல் இழப்பும் இதுதான்” எனக் கூறி உள்ளார்.

இதே மீட்புக் கப்பல்  கடந்த 2014 ஆம் ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியிலும் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.