குடியுரிமைக்காக போலி திருமணம்: ஆஸ்திரேலியா எச்சரிக்கை

டில்லி:

ஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ விரும்பும் தெற்கு ஆசியர்களை குறிவைத்துத் திட்டமிடப்பட்ட திருமண மோசடிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும், என்று ஆஸ்திரேலிய உயர் ஆணையம் எச்சரித்துள்ளது.

 

ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை சிட்னியில் 32 வயதான இந்தியர் ஒருவர் இது போன்ற சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டதை கண்டறிந்துள்ளது.

நான்கு ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் சட்டத்துக்கு விரோதமாக ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாதவர்களுக்கு திருமணம் மூலம் குடியுரிமை பெற்றுத்தரும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 164 பார்ட்னர் விசாக்கள் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் உள்ளவர்கள் யாருக்கும் நிரந்தர முகவரி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடிகளில் ஈடுபட்ட பல பெண்கள் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களாகவும், குடும்ப வன்முறை மற்றும் நிதி நெருக்கடி உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்று ஆஸ்திரேலிய ஆணையம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி