னது குழந்தைப் பருவ படங்களை தனது அனுமதியின்றி பகிர்ந்த பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குத் தொடுத்துள்ளார் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்.
1astriya
தான் குழந்தையாக இருந்த போது தனக்கு பாம்ப்பர்ஸ் மாற்றுவது, காலை கடன்களை முடிக்க பயிற்சி அளித்தது உள்ளிட்ட தேவையற்ற படங்களை தனது கடுமையான எதிர்ப்பையும் மீறி பதிந்தது தன்னை பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கியிருப்பதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
எனது நண்பர்கள் மத்தியில் என்னை கேலிப்பொருளாக என் பெற்றோர் மாற்றிவிட்டார்கள் என்று அவர் ஆதங்கப்படுகிறார்.
இந்த படங்களை எடுத்தது தான்தான் எனவே தனக்கு இதை சமூக வலைதளங்களில் பதியும் உரிமை இருப்பதாக அந்தப் பெண்ணினின் தந்தை தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டிலிருந்து இவர் தனது மகளின் படங்களை பகிர்ந்து வருகிறார். அவர் இதுவரை கிட்டத்தட்ட 500 படங்களை பதிந்திருப்பதாக தெரியவருகிறது.
தனது சொந்த பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்களது அனுமதியின்றி அவர்கள் புகைப்படங்களைப் பகிரக்கூடாது என்று ஆஸ்திரியா நாட்டில் ஒரு சட்டம் உள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனது மகள் அடைந்த மன உளைச்சலுக்கு ஈடாக அவளது பெற்றோர் அவளுக்கு பெருந்தொகையை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டியதிருக்கும்.
பிரான்ஸ் நாட்டில் ஒருவரது அனுமதியின்றி இன்னொருவர் அவரது படங்களை சமூக வலைதளங்களில் பதிந்தால் அவருக்கு ஓராண்டு சிறையும் இந்திய மதிப்பில் 33 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டியதிருக்கும்.