ஆஸ்திரியாவில் நாளை முதல் டிச.6 வரை 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்

ஆஸ்திரியா:
த்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் நாளை முதல் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல் படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவலின் 2ஆவது அலை அச்சம் காரணமாக ஆஸ்திரியாவில் தற்போது, இரவு நேர ஊரடங்கு மற்றும் பகுதிநேர பணி நிறுத்தம் அமலில் உள்ளது.

இதன்படி, இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அமலில் இருக்கும் ஊரடங்கின்போது, காஃபி ஷாப், மதுபான விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் உள்ளிட்டவைகள் சில நிபந்தனைகளுடன் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனால், தியேட்டர்கள் மற்றும் மியூசியங்களை திறக்க, அனுமதி கிடையாது. இந்த சூழலில், கொரோனாவின் 2ஆவது அலை அச்சம் காரணமாக, வருகிற செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்து, இதற்கான உத்தரவை ஆஸ்திரிய அரசு பிறப்பித்துள்ளது.