புதுடெல்லி:

இண்டியாஸ் டிவைடர் இன் சீஃப் என்ற கட்டுரையை டைம் இதழில் எழுதிய ஆதிஸ் தஷீர் மீது பாஜகவினர் ட்விட்டர் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.


இந்திய பத்திரிக்கையாளர் தல்வீன் சிங்கின் மகனான ஆதிஸ் தஷீர், பிரிட்டிஷில் பிறந்தவர். எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்ற முகங்களை கொண்டவர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி முதல் கீழ்மட்ட தலைவர்கள் வரை ஆதிஸ் தஷீரை திட்டித் தீர்த்தனர்.
ஆதிஸ் தஷீர் காங்கிரஸ் கட்சியின் மக்கள் தொடர்பு மேலாளராக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதனிடையே, ஆதிஸ் தஷீர் குறித்த விக்கிபீடியா பக்கத்தில் புகுந்து காங்கிரஸின் மக்கள் தொடர்பு மேலாளர் என்ற வாசத்தை எழுதியுள்ளனர்.

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானலும் உள்ளே புகுந்து எடிட் செய்ய முடியும். இதை பயன்படுத்தி ஆதிஸ் தஷீரின் விக்கிப்பீடியா பக்கத்தை பாஜகவினர் குதறி எடுத்துவிட்டனர்.