திமுக முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இணைந்தார்

selvaraj-jaya

திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் இன்று சென்னை போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்குக் கொண்டவர் செல்வராஜ். இவர் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். ஆனால், அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை.

இதையடுத்து, அவர் தனது அதிருப்தியை தலைமையிடம் எடுத்துச் சென்றும், எந்த பலனும் இல்லை. அதனால், இன்று அவர் சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். பிறகு, அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.