compaign
தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆர்.கே.,நகர் தொகுதியிலும் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திமுகவினர், சுயேச்சைகள் உள்பட 83 வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதிமுக, மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து யாரும் வேட்புமனுக்களை அளிக்கவில்லை. புதுச்சேரியில் தொடக்க நாளில் 3 பேர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் தொடங்கிய வெள்ளிக்கிழமையன்று (ஏப்.22) பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், வேட்புமனு தாக்கலின்போது எந்த பரபரப்பும் ஏற்படவில்லை.
இதற்கிடையில்சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் இல்லை. மீண்டும் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆர்.கே.,நகர் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால், திங்கள்கிழமையிலிருந்து மனுதாக்கல் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.