மேற்கு வங்கத்தில் இன்று மூன்றாம் கட்டத் தேர்தல்

merku1

மேற்கு வங்க மாநிலம், மூர்ஷிதாபாத், நடியா, பர்த்வான் மற்றும் கோல்கட்டாவில் உள்ள 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று(ஏப்.,21) நடைபெறுகிறது. 1.37 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதிகளில், 16,641 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் 75,000 பேர் உள்பட ஒரு லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.