hi
உத்தரகண்ட் சட்டசபையை அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவின் கீழ், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலைத்ததை எதிர்த்து, பதவியிழந்த முதல்வர் ஹரீஷ் ராவத் தொடுத்த மனு, அம்மாநில ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி வி.கே. பிஷ்ட் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஜனாதிபதியின் முடிவும், நீதித் துறையின் மறுஆய்வுக்கு உட்படுத்தக்கூடியதுதான் எனத் தெரிவித்தது.