நடிகை பிபாஷா பாசு திருமணம் – அமிதாப்பச்சன், ஷாருக்கான்,சல்மான்கான் நேரில் வாழ்த்து

ani666

பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசுவும், இந்தி நடிகர் கரண்சிங் குரோவரும் இணைந்து ‘அலோன்’ என்ற படத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. அப்போது, அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி, நேற்று முன்தினம் மாலை மும்பையில் பிபாஷா பாசு – கரண்சிங் குரோவர் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

வங்காள முறைப்படி நடந்த இந்த திருமண விழாவில் இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் பங்கேற்றனர். அன்றைய தினம் மாலை தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அபிஷேக்பச்சன், ரன்வீர் கபூர், சஞ்சய் தத், ரித்தேஷ் தேஷ்முக், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென், தபு, தியா மிர்ஷா, ஜெனிலியா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, அவர்களது முன்னிலையில் பிபாஷா பாசு – கரண்சிங் குரோவர் தம்பதியினர் ‘கேக்’ வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

37 வயது நடிகை பிபாஷா பாசுவுக்கு முதலாவது திருமணமாக இருந்தாலும், அவரது காதல் கணவரான 34 வயது கரண்சிங் குரோவருக்கு 3 – வது திருமணம் ஆகும். ஏற்கனவே, அவர் டி.வி. நடிகைகள் ஸ்ரத்தா நிகாம், மற்றும் ஜெனிபர் விங்கெட் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Alon film, cinipits, Hindi Actress Bipasha Basu - karancin Grover, Mumbai, அலோன் படம், இந்தி நடிகை பிபாஷா பாசு - கரண்சிங் குரோவர் திருமணம், சினிபிட்ஸ், மும்பை
-=-