நடிகை நமீதா ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

vakka44 அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில்  இணைந்தார். திருச்சியில் ஜெயலலிதா இன்று மாலை 8 மாவட்டங்களைச்சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரவு திரட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப்பேசினார். அப்போது பிரச்சார மேடையில் நடிகை நமீதா ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

மார்ச் மாதம் 30ம் தேதி, அதிமுகவில் இணைய விரும்புவதாக ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார் நமீதா. இந்நிலையில் ஏப்ரல் மாதம் 23ம் தேதி இன்று அதிமுகவில் இணைந்தார்.

vakk2333திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரமும் இதே மேடையில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.