ஆந்திர பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து

bio

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பயோ டீசல் ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பயோ டீசல் மற்றும் 12 டீசல் டேங்கர்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 40 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தொடர்ந்து தீ கட்டுக்கடாங்காமல் கொழுந்து விட்டு எரிவதால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்படுகிறது.

12 கடற்படை தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி