இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்ற கூட்டத்தொடர்

parl88பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23–ந்தேதி தொடங்கி மார்ச் 16–ந்தேதி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தின் 2–ம் கட்ட பட்ஜெட் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 13–ந்தேதி வரை நடக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது.

உத்தரகாண்ட் விவகாரம் மீது தொடரின் முதல் நாளான இன்றைக்கே விவாதம் நடத்துவதற்காக மேல்–சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீசு அளித்துள்ளது. இதற்கு இடதுசாரிகள், ஐக்கிய ஜனதாதளம் போன்ற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதுதவிர வறட்சி மேலாண்மை, இஸ்ரத் ஜகான் வழக்கு, பதன்கோட் தீவிரவாத தாக்குதல், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் பாராளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

இதற்கிடையே பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு காங்கிரசுக்கு பா.ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது. மேலும் இது தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டமும் நடந்தது.

கார்ட்டூன் கேலரி