சென்னை காவல் துறை ஆணையர் மாற்றம்

tp

சென்னை காவல் துறை ஆணையாளராக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதன்மை செயலாளர் அபூர்வா வர்மா வெளியிட்ட ஆணை விவரம்:

சென்னை மாநகர காவல் துறை ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு, அமலாக்கத் துறையின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் அசுதோஷ் சுக்லா புதிய ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

இதுபோல, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் ஜெ.கே.திரிபாதி மாற்றப்பட்டு, கடலோர காவல் படையின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் சைலேந்திர பாபு நியமிக்கப்படுகிறார்.