காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மகள் புற்றுநோயால் மரணம்

--

mou

திக்விஜய் சிங்கின் மகளான கர்னிகா(37) சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் நோயின் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து டெல்லி சாக்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு முன்னதாக, வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்றுவந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறிவந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் சாக்கெட் ஆஸ்பத்திரியில் கர்னிகாவின் உயிர் பிரிந்தது. இறுதிச் சடங்குக்காக அவரது பிரேதம் குஜராத் மாநிலத்தில் உள்ள திக்விஜய் சிங்கின் சொந்த ஊரான வத்வான் பகுதிக்கு இன்று பிற்பகல் கொண்டு செல்லப்பட்டது.

திக்விஜய் சிங்கின் முதல் மனைவியும் கர்னிகாவின் தாயாருமான ஆஷாவும் கடந்த 2013-ம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.