பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ஆலோசனை

ben1

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க.

முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொகுதியிலுள்ள பா.ம.க. நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி தொகுதி வேட்பாளர் மருத்துவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது அ.தி.மு.,க.வைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அக்கட்சியிலிருந்து விலகி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்னிலையில் பா.ம.க.வில் இணைந்தனர்.