தேர்தல் அலுவலர்களுக்கு அம்மா சாப்பாடு போட்டு கல்லா கட்டும் அதிகாரிகள்

GSP_002-a

சென்னை முழுதும் இன்று தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது.

பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு காலையிலிருந்து டிபன் இல்லை. அம்மா உணவகத்திலிருந்து மோரும் சுண்டலும் வழங்கப்பட்டுள்ளது. மதியம் அம்மா உணவகத்திலிருந்து தயிர்சாதமும் , சாம்பார் சாதமும் தரப்பட்டுள்ளதாம்.

தேர்தல் ஆணையம் ஊழியர்களை வேலை வாங்குகிறது . நல்ல உணவுக்காக நிதியும் ஒதுக்கியுள்ளது ஆனால் வழக்கம் போல் இந்த அதிகாரிகள் கல்லா கட்டுவதற்காக இப்படி அராஜகம் செய்கின்றனர். இதை தட்டிக்கேட்டால் கமிஷனர் உத்தரவு என்கின்றனர்.

நல்ல உணவு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு இருக்கும்போது எப்படி இதுபோன்று அதிகாரிகள் விளையாடுகின்றனர். அதிலும் மண்டலம் 13 – ல் இதை காரணம் காட்டி பெரிய அளவில் பணம் பார்த்துள்ளனர். இதைக்கண்டு கொந்தளித்துப்போய், திருவான்மியூர் பாரதியார் பள்ளியில் ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கார்ட்டூன் கேலரி