hi
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் டி.ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மே 1 முதல் மே 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில், 4 பகுதிகளாக விடுமுறைக் கால நீதிமன்றம் செயல்படும். வாரந்தோறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வழக்கு தாக்கல் செய்யலாம். புதன், வியாழக்கிழமைகளில் உயர்நீதிமன்றம் செயல்படும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் பகுதி விடுமுறைக் கால நீதிபதிகளாக கே.கே.சசிதரன், எஸ்.விமலா, பி.கலையரசனும், 2-ஆவது பகுதி நீதிபதிகளாக என்.கிருபாகரன், எம்.வி.முரளிதரன், வி.பாரதிதாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, 3-ஆவது பகுதி நீதிபதிகளாக கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணகுமார், ஆர்.மகாதேவனும், 4-ஆவது பகுதி நீதிபதிகளாக எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை கிளையில்…: விடுமுறை கால முதல் பகுதி நீதிபதிகளாக டி.எஸ்.சிவஞானம், பி.என்.பிரகாசும், 2-ஆவது பகுதி நீதிபதிகளாக ஜி.சொக்கலிங்கம், பி.கலையரசனும், 3-ஆவது பகுதி நீதிபதிகளாக எம்.வி.முரளிதரன், பி.கோகுல்தாசும், 4-ஆவது பகுதி நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.