அமெரிக்காவில் ‘24’ பிரிமீயர் ஷோ – சூர்யா-ஜோதிகா பங்கேற்பு

jothika

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘24’. சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை விக்ரம் குமார் இயக்கியிருக்கிறார். அறிவியல் மற்றும் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியிருக்கும் இப்படம் உலகமெங்கும் வருகிற மே 6-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படம் மே 5-ந் தேதியே அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது. அங்கு நடக்கும் பிரிமீயர் ஷோவில் சூர்யா-ஜோதிகா இருவரும் கலந்துகொள்கிறார்கள். இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து மறுநாள் மற்ற நாடுகளிலும், இந்தியாவிலும் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். சூர்யா இதில் மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். இதில் வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

You may have missed