இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர் உமேஷ் சின்கா சென்னையில் முக்கிய ஆலோசனை

um
இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர்களில் ஒருவரான உமேஷ் சின்கா இன்று சென்னை வந்தார். கிண்டியில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசினார். சென்னையை ஒட்டிய 8 மாவட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழக தேர்தல் நெருங்கி வருவதால் முன்னேற்பாடு பணிகள் மிக வேகத்தை எட்டியுள்ளது.