kar555
 
இன்று மாலை 3.15 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி பிரச்சார வேனில் புறப்படுகிறார்.
அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை செல்லும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.
கூட்டத்திற்கு சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளரான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். இதில் வேட்பாளர்கள் தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்), நடிகர் வாகை சந்திரசேகர் (வேளச்சேரி) கே.கே.நகர் தனசேகரன் (விருகம்பாக்கம்), அரவிந்த் ரமேஷ் (சோழிங்க நல்லூர்) ஆகிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
அதன்பிறகு அங்கிருந்து மத்திய கைலாஸ் வழியாக 6 மணிக்கு மரக்காணம் செல்கிறார். அங்கு வேனில் இருந்தபடி பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு புதுக்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இரவு புதுச்சேரியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.
24–ந் தேதி மாலை கடலூர் பொதுக் கூட்டத்தில் பேசும் அவர் வேனில் 5 மணிக்கு சிதம்பரம் சென்று பேசுகிறார். 6.30 மணிக்கு சீர்காழியில் பேசிவிட்டு இரவு 7 மணிக்கு மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் திருவாரூர் சென்று தங்குகிறார்.
25–ந் தேதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் கருணாநிதி தாக்கல் செய்கிறார்.
அன்று இரவு திருவாரூரில் பிரமாண்டமாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் திருவாரூரில் தங்கி விட்டு மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இரவு தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
27–ந் தேதி இரவு திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு அங்கு தங்குகிறார். 28–ந் தேதி வேனில் பெரம்பலூர், உளுந்தூர்பேட்டையில் பேசுகிறார். பின்னர் விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
அன்று மாலை திண்டிவனம் – செங்கற்பட்டு ஆகிய இடங்களில் பேசுகிறார். பின்னர் வேன் மூலம் சென்னை திரும்புகிறார்.
பின்னர், அடுத்த கட்டமாக அவரது பிரசார பயணம் வருமாறு:–
1–ந்தேதி இரவு 8.10 மணிக்கு ரயில் மூலம் புறப்படுகிறார்.
2–ந் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி பொதுக் கூட்டம். மாலை 6 மணி ஆலங்குளம். இரவு 7 மணி கடையநல்லூர். 8 மணி சங்கரன்கோவில், 9 மணி ராஜபாளையம்.
3–ந் தேதி மாலை 4 மணி திருவில்லிப்புத்தூர், 6 மணி விருதுநகர், 7 மணி அருப்புக்கோட்டை, 8 மணி காரியப்பட்டி, 9 மணி மதுரை பொதுக்கூட்டம்.
5–ந் தேதி மாலை சென்னை பொதுக்கூட்டம்
7–ந்தேதி மாலை 4.30 மணிக்கு காஞ்சீபுரம் பொதுக் கூட்டம், இரவு 7.30 மணி ராணிப்பேட்டை, 8 மணி காட்பாடி, 9 மணி வேலூர் பொதுக்கூட்டம்.
8–ந் தேதி மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி, இரவு 7 மணி தர்மபுரி, 9 மணி சேலம் பொதுக்கூட்டம்.
9–ந் தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு பொதுக்கூட்டம், இரவு 7 மணிக்கு திருப்பூர், 8.30 மணிக்கு கோவை.
12–ந் தேதி திருவாரூர் தொகுதி, 14–ந் தேதி சென்னை திரும்புகிறார்.