ஜெயலலிதா பிரச்சாரம் உயிர்கொல்லும் பிரச்சாரம் – இளங்கோவன் பேட்டி

uir

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தி.மு.க. கூட்டணி 3–வது இடத்துக்கு தள்ளப்படும் என ஜெயலலிதா கூறிவருவது தோல்வி பயத்தினால் தான். தி.மு.க. தலைவர் கலைஞர் மீதான தாக்குதலை மட்டுமே அவர் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா பிரசாரம் உயிர்கொல்லும் பிரசாரம் ஆகும். ஆடு மாடுகளை போல் மக்களை அடைத்து வைத்து தாகத்திற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் வாட்டி வதைக்கிறார்கள்.

தேர்தலில் பணப்பட்டு வாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் 6 பேரும் ஒவ்வொரு திசையில் உள்ளனர். 4 பேர் பல்லக்கு தூக்க ஒருவர் சங்கு ஊத, மற்றொருவர் படுத்திருக்கிறார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக வெளியாகும் கருத்துக்கணிப்புகள் திரித்து கூறப்பட்டவையாக உள்ளன. இதைபற்றி கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு கூறினார்.

You may have missed