வாக்குசேகரிக்க சென்ற அமைச்சர் மோகன் – செருப்பைக்காட்டி அமைச்சரை துரத்திய மக்கள்

mogan88
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும் அதிமுக கழக அமைப்பு செயலாளர் அமைச்சர் மோகன் இன்று காலை வாக்கு சேகரிக்க சென்றார்.   கொசப்பாடி அரசம்பட்டு கிராமத்திற்கு  உள்ளே விடாமல் செருப்பையும் வெளக்கமாத்தையும் காட்டி  எச்சரித்தனர்.
எச்சரிக்கையை மீறி உள்ளே வந்தால் கண்டிப்பா செருப்பு, வெளக்கமாத்தியால் அடிப்போம் என சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் அமைச்சர் மோகனை தரக் குறைவாக பேசி உள்ளே விடாமல் அனுப்பி உள்ளனர்.
 இதனால் அமைச்சர்  மோகன் அசிங்கபட்டு ஊரை விட்டு  சோகத்துடன் வாக்கு கேட்காமல் வந்து விட்டார்.  இந்த சம்பவத்தால் சங்கராபும் தொகுதி முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.