vi666
தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி, தமாகா கூட்டணி கட்சிகளின் அரியலூர் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கினைப்பாளர் வைகோ காட்டுமன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
’’தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி,தமாகா கட்சிகளின் கூட்டணிக்கு தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கணக்கான விவசாய உறுப்பினர்களை கொண்ட 94 விவசாய சங்கங்களை ஒருங்கி னைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித் துள்ளது. இவர்கள் வரும் மே 2 ந்தேதி கோவை மாவட்டம் பல்லடத்தில் மிக பெரிய விவசாயிகளின் விடியல் மாநாடு நடத்துகிறார்கள்.
இதில் தமிழகத்தில் உள்ள பல்லாயிரகணக்கான விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்.இதில் மாற்று கட்சி தலைவராக நான் கலந்து கொள்கிறேன். அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக போராடிய முன்னாள் எம்பி கணேசமூர்த்தி கலந்து கொள்கிறார். இது தமிழகத்தில் ஊழல் கட்சிகளை ஒழித்து விடியலை ஏற்படுத்தும் மாநாடக அமையும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.
கரூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ரூ 5 கோடிக்கு மேல் பதுக்கிவைத்துள்ளதாக தேர்தல் கமிசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி விந்தியா பாண்டியன் பணம் இருந்த இடத்துக்கு செய்தியாளர்களை அனுமதிக்காமல் அங்கு இருந்த பணத்தை போலிஸ் உதவியுடன் அப்புறபடுத்திவிட்டு வெறும் ரூ 10 லட்சம் மட்டும் தான் உள்ளது என்று கூறியுள்ளார். இது எவ்வளவு பெரிய மோசடியான வேலை.
பணம் இருந்த வீட்டில் 20 பணம் என்னும் மிசின் இருந்துள்ளது. புளி,சாக்கு உள்ளிட்ட பொருட்களை எடைபோடுவதை பார்த்து இருக்கேன் பணத்தை எடைபோட வந்த மிசினை இப்போதான் பாத்திருக்கிறேன். இதே போல் தமிழகத்தில் 100 இடங்களில் தலா 20 பணம் எடை போடும் மிசின் வைத்துள்ளனர். பணங்கள் அனைத்தும் 108 வாகனம்,போலிஸ் அதிகாரிகள் வாகனம் மூலம் பட்டுவடா செய்யபடுகிறது. இனிமே 108 வாகனத்தையும் போலிஸ் அதிகாரிகள் வாகனத்தையும் தரவாக சோதனை செய்யவேண்டும்.
இது போல் நூதனமுறையில் கொள்ளை சம்பவத்தை அறங்கேற்றுபவர்கள் அதிமுக,திமுகவை தவிர வேறு கட்சிகள் இல்லை. இதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது.
தற்போது இளைஞர்களிடம் அலைபேசி புரட்சி ஏற்பட்டுள்ளது. எங்கு தவறு நடந்தாலும் வெளி உலகுக்கு தெரியாமல் செய்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் அதிகாரிகளை மாற்றுவது ஏமாற்று வேலை.
மூன்று நிமிட வெய்யிலை கூட பொறுத்துகொள்ள முடியாத உலத்திலே ஈவு இறக்கமற்ற நபர் யார் என்றால் ஜெயலலிதா தான்., தேர்தல் பிரச்சாரத்தில் 6 நபரை கொன்று விட்டார். இது மிகவும் வேதனையான விசயம் என்று கூறினார்.
முன்னதாக வைகோவை சிதம்பரம் சட்ட மன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ அவரை சந்தித்து சால்வை அனிவித்து வாழ்த்து தெரிவித்தார்.