patt
எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 20 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 7 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
1. பாகூர் – வேணுகோபால் (மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்)
2. உப்பளம் – முகமது யூனஸ் (மாநில பொருளாளர்)
3. வில்லியனூர் – முருகன் (மாநில துணைச் செயலாளர்)
4. கதிர்காமம் – ராதா கிருஷ்ணன் (தொகுதி தலைவர்)
5. ஊசுடு (தனி) – குமரேசன் (எஸ்–எஸ்.டி. தலைவர்)
6. காமராஜர்நகர் – சீத்தா ராமன் (தொகுதி தலைவர்)
7. திருபுவனை (தனி)– வெங்கடேசன் (தொகுதி துணைச் செயலாளர்)
மீதமுள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெகுவிரைவில் அறிவிக்கப் படுவார்கள். என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.