மாவட்ட தலைவரை அடித்த பொன்.ராதாகிருஷ்ணன்

pon88
மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் மகாலெட்சுமியை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அனுபானடி, தவிட்டுசந்தை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் இருந்த மாவட்ட தலைவர் சசிராமன் இருந்தார். அவருக்கு செல்போனில் அழைப்பு வர அதனை எடுத்து அவர் பேசினார். அப்போது அவரது முதுகில் அடித்த பொன்.ராதாகிருஷ்ணன் ஏதோ கோபமாக கூறினார்.

பின்னர் மைக்கில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நான் அன்பால் அடித்தேன். இன்னொரு கட்சித் தலைவர் போல் அடித்து உதைக்க மாட்டேன். சசிராமன் எனது தம்பி. அன்பால் என்னை கட்டிப்போட்டவர். பாஜக ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி வழங்கப்படும். தற்போது ஆயிரம் அரசு பள்ளிகளை மூடிவிட்டனர். இரண்டாயிரம் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வியை கொடுப்போம் என்றார்.